வாழ்வில் வசந்தங்கள் தந்திட,
என்னில் பாதியை ஏற்றிட ,
கை கோர்த்து இலக்கின்றி நடந்திட,
மங்கும் மாலைகளை சேர்ந்து இரசித்திட,
மடியினில் சாய்ந்து துயில் கொண்டிட,
காதல் களித்து கொண்டாடிட,
தோள் சாய்த்து துயர் நீக்கிட ,
அரவணைத்து அமைதி தந்திட ,
நம் கனவுகளை இணைந்து நனவாக்கிட ,
மெல்லிய சுரத்தினில் காதல் மொழி பேசிட ,
திகட்டாமல் தீராமல் காதல் செய்திட,
உன் உயர்வு கண்டு நான் பூரித்து மகிழ்ந்திட,
என்னை அழகாய் கொண்டு ரசித்து சிலாகித்திட,
பரிசு பரிமாற்றங்கள் நடத்தி இரசித்திட,
பேரன்போடு பெரு வாழ்வு வாழ்ந்திட ,
பிரிவுகள் வாட்டி வதைத்திட,
கண் பார்வையிலே தீராக் கதைகள் பேசிட,
கள்ளப் பார்வைகளில் உறைந்து மீண்டிட,
இயற்கையை ரசித்து மெய் மறந்திட,
புத்தகங்களில் புதைந்து தொலைந்திட,
பேரின்ப மழையினில் மழலையாய் ஆட்டம் போட்டு திளைத்திட,
சில நிமிடம் நீடிக்கா செல்லச் சண்டைகள் போட்டிட,
சுதந்திரம், சுய மரியாதையோடு முழு வாழுவு வாழ்ந்திட ,
கால் கொலுசின் இசை கோர்வைகளில் கரைந்திட ,
உன் பாதம் பிடித்து பரிகாரம் செய்திட,
வெட்கம் கூடிய நின் பேரழகு முகத்தினை ஆராதித்திட ,.
இதழோரப் புன்னகைகள் உள்ளத்தை உடைத்து எறிந்திட,
கற்றை கூந்தல் காட்டில் வாசம் செய்திட,
தமிழினும் இனிய கவித்துமான இல்லறம் செய்திட ,
வள்ளுவனை விடவும் பயனுள்ள வாழ்வை வாழ்ந்திட ,
பெருங்கவிகள் செய்திரா கவிதைகள் செய்திட ,
ஆற்றங்கரையில் தென்றல் காற்றினில் கரம் கோர்த்து கதைகள் பேசி காலம் தொலைத்திட ,
இருவருக்கே ஆன பிரத்யேக உலகம் செய்திட ,
தூய பெரும் அன்பினால் வாழ்வை பூரணமாக்கிட,
ஓர் உயிராய் இணைந்து வாழ்வெனும் பெரும் பயணம் செய்திட,
விரைந்து வந்திடு என்னவளே..
வரங்கள் தந்திடு என்னவளே..
மீட்பைத் தந்திடு என்னவளே ..
எவ்வாறு இருப்பாய், என்ன பெயரில் இருக்கியாய் என்னவளே...
தாளாத ஏக்கங்களை தீயிலிட்டு விரைந்து மோட்சம் தாராயோ என் சகியே !!!

Super Aravind. Commit aagita pola😉
ReplyDeleteநீங்கள் இருக்கும் போது எப்புடி சீக்கிரம் நடக்கும் நண்பா
Deleteபேரன்போடு பெருவாழ்வு வாழ்ந்திட...
ReplyDeleteபேரழகு மன்னா வரிகள்..
நன்றி மன்னா
DeleteSema na😍 Eagerly waiting for my anni❤️
ReplyDeleteThank you ma. Me too waiting ma 😀
Deleteமிக அருமையான கற்பனை நயம் நிறைந்த வரிகள் அரவிந்த்... நல்ல முயற்சி... தொடர்ந்து பதிவிடவும்...
ReplyDelete