மாதொருபாகன் - பெருமாள் முருகன்
பெரிதாக குறிப்பு எழுத மனம் சம்மதிக்கவே இல்லை. ஆகவே மிகச் சிறிதாக குறிப்பிடுகிறேன். இந்த நாவல் நடப்பது சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியா. குழந்தையற்ற ஓர் தம்பதியின் பெருங்காதலையும்,ஊர் வாய் தரும் வலியையும் பேசும் நாவல் இது. காலம் மாறி சமூகத்தின் வாழ்நிலை மாறிய போதும் சமூகம் சிறிதும் பண்படவில்லை எனும் உண்மை பெரும் வருத்தம் கொடுக்கிறது. ஏனெனில் இன்றும் ஊர் வாய் புரையோடிப் போன பொது புத்தியால் பலர் வாழ்வில் நெருப்பை அள்ளி கொட்டுகிறது. இந்நாவலிலும் தீராத காதலுடன் வாழும் பொண்ணா-காளியின் அழகிய வாழ்வை ஊர் வாய் அழித்தொழிக்கிறது. பெரும் கோபத்துடனும், அடக்க முடியா துயருடனும் இந்நாவலை முடித்தேன்.
Comments
Post a Comment