எல்லோர் வாழ்விலும் மறக்க விரும்பா நாள் ஒன்று இருக்கும், என் வாழ்வில் அப்படியான ஒரு நாள் தான் அது. அது ஒரு வெள்ளிக்கிழமை அன்று மதியத்துக்கு மேலாகவே அலுவலகத்தில் இருப்பு கொள்ளவில்லை. காரணம் இல்லாத அதீத மன அழுத்தம், எதையாவது உடைக்க வேண்டும் போன்ற மனவோட்டம் இரண்டும் உருவாகியிருந்தது. நேரம் செல்ல செல்ல அந்த அழுத்தம் கூடிக்கொண்டே போனது. எதற்கும் அந்த அழுத்தம் கட்டுப்படவே இல்லை புத்தகம், நண்பர்கள் எதற்கும். மெல்ல அந்த அழுத்தம் தற்கொலை எண்ணமாக மாறுவதை உணரவே மனதில் பயம் வர ஆரம்பித்தது. திடீரென தனியாக எங்காவது பயணம் செல்வோம் அது உதவும் என தோன்றியது. நீண்ட நாள் ஆசையான தஞ்சாவூர் போகலாம் என முடிவு செய்து கிளம்பினேன். இப்பயணத்தில் கைபேசி இல்லாமல் மனிதர்கள் உதவி கொண்டே எல்லா விஷயத்தையும் செய்யணும்னு முடிவு பண்ணிக்கிட்டேன். முன்பதிவுகள் புகைப்படம் கூடாதெனவும் முடிவு. சென்னை கோயம்பேட்டில் இருந்து ஒரு அரசு விரைவு பேருந்தில் ஏறிக்கொண்டேன். பின் பகுதியில் தான் இடம் இருந்தது மெல்ல உள்ளே சென்றேன் ஜன்னல் ஒர இருக்கையில் ஒரு பையன் அமர்ந்திருந்தான். அவனது வசீகரிக்கிற, சுறுசுறுப்பான முகம் மன...
Comments
Post a Comment