மற்றமையை உற்றமையாக்கிட - வாசுகி பாஸ்கர்
தோழர் வாசுகி பாஸ்கர் முக நூலில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த புத்தகம். கட்டற்ற சுதந்திரம் கொண்ட ஓர் தளத்தில் சுய பொறுப்புடனும், தரவுகளுடனும் அதேசமயம் நுட்பமாகவும் எழுதப் பட்டவை இக்கட்டுரைகள்.
சாதி, மதம், இணையம், சினிமா, சமூக ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை மற்றும் பகுத்தறிவு என பல்வேறு விஷயங்களை இப்புத்தகம் பேசுகிறது. ஒவ்வொரு கட்டுரையும் நமக்கு புதிய பார்வையையும் திறப்புகளையும் தருபவை.
மிக முக்கியமாக சமத்துவமான மானுடம் மிகுந்த ஓர் சமூகம் அமைய தனி மனிதனின் மனமார்ந்த முயற்சியே ஒரே வழி எனும் உண்மையை பொட்டில் அறைந்து கூறுகிறார் தோழர் வாசுகி பாஸ்கர். வாசக சாலையின் வெளியீடாக வந்திருக்கும் இப்புத்தகம் அனைவரும் வாசிக்க வேண்டிய ஒன்று.
Comments
Post a Comment