விமலாதித்த மாமல்லன் எழுதிய புனைவு என்னும் புதிர் நூலை, தீவிரமாக இலக்கியம் வாசிக்க விரும்பும் நண்பர்கள் அவசியம் வாசிக்க வேண்டும்.
தமிழின் முன்னோடி எழுத்தாளர்களின் சிறுகதைகள் பற்றிய கட்டுரை தொகுப்பு இந்நூல்.
இக்கட்டுரைகள் வாயிலாக, யார் உன்னத கலைஞன் ? எது கலைப்படைப்பு? கேளிக்கை எழுத்துக்கும் இலக்கியத்துக்கும் உள்ள வேறுபாடு என்ன ? தீவிர வாசிப்பின் வழியாக படைப்பில் இருந்து வாசகன் செல்லும் எல்லைகள் மற்றும் கண்டடையும் விசயங்கள் எவை? என பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.
ஆழ்ந்த வாசிப்பினால் எழுதியதை வைத்து எழுதாதவற்றை வாசகன் உணர முடியும் என்பது பெரும் படிப்பினை எனக்கு.
கட்டுரைகள் தொடர்பான கதைகளும் இப்புத்தகத்திலேயே இருப்பது கூடுதல் சிறப்பு. இது நம் வாசிப்பை பரிசோதிக்க உதவுகிறது.
Comments
Post a Comment