குமாயுன் புலிகள் - ஜிம் கார்பெட்
தமிழில் தி. ஜ.ர.
ஜிம் கார்பெட் ஓர் ஆங்கிலேய வேட்டைக்காரர் மற்றும் வன உயிர் ஆர்வலர். கம்பெனி ஆட்சிக் காலத்தில் இன்றைய உத்ரகாண்ட் மாநிலத்தில் உள்ள குமாயுன் பிரதேசத்தில் தங்கி அங்குள்ள ஆட்கொல்லி புலிகளை வேட்டையாடியவர். இவ்வாறான வேட்டை அனுபவ கட்டுரைகளின் தொகுப்பு இப்புத்தகம்.
கிண்டிலில் தினமும் கிடைக்கும் இலவச புத்தகங்களில் ஒன்றாய் இது எனக்கு கிடைத்தது.
ஆசிரியர் உரையின் வழியே வேங்கைகள் ஆட்கொல்லிகளாக மாறுவதன் காரணத்தை தெளிவாக விளக்கியுள்ளார் ஜிம். மேலும் வேங்கைகள் மீதான மோசமான பொது கருத்துக் களை உடைக்கவும் செய்துள்ளார். மக்களை காக்க ஆட்கொல்லி புலிகளை வேட்டையாடிய போதும் அவற்றின் மீது ஜிம் வைத்திருந்த நேசத்தை உணர முடிந்தது.
ஆறு ஆட்கொல்லி புலிகள், ஒரு சிறுத்தை மற்றும் ஒரு மயில் கெண்டை மீன் ஆகியவற்றின் வேட்டை அனுபவங்களை இப்புத்தகம் கொண்டுள்ளது.
ஜிம் ஒரு இடத்தில் கூட தன்னை மிகைப்படுத்தாமல் வேட்டையின் போது அஞ்சி நடுங்கிய தருணங்களை வெளிப்படையாக பதிவு செய்துள்ளார். அவரின் இந்த நேர்மை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும் தேச வேறுபாடின்றி மக்களை அவர் நேசித்ததை இப்புத்தகத்தில் உணர முடிந்தது.
நம்மால் இன்று வாழவே முடியாத வேட்டைக் காரனின் வாழ்வை இப்புத்தகத்தின் மூலம் நாம் வாழ்ந்து கொள்ளலாம். ஜிம் அவ்வளவு விரிவாக தன் அனுபவங்களை பதிவு செய்துள்ளார். அதற்கு நாம் அவருக்கு கடமைப்பட்டுள்ளோம்.
தமிழில் நேரடியாக எழுதப்பட்ட புத்தகம் போல மொழி பெயர்ப்பு செய்துள்ளார் தி. ஜ.ர. அருமையான மொழிபெயர்ப்பு.
நிச்சயம் ஒரு புதிய மற்றும் தனித்துவமான அனுபவ
த்தை வேண்டும் நண்பர்கள் அவசியம் இப்புத்தகத்தை வாசியுங்கள். காடுகளுக்கள் ஜிம் உடன் வேட்டைக்கு சென்று வாருங்கள் நண்பர்களே.
Comments
Post a Comment