வாழ்வில் வசந்தங்கள் தந்திட, என்னில் பாதியை ஏற்றிட , கை கோர்த்து இலக்கின்றி நடந்திட, மங்கும் மாலைகளை சேர்ந்து இரசித்திட, மடியினில் சாய்ந்து துயில் கொண்டிட, காதல் களித்து கொண்டாடிட, தோள் சாய்த்து துயர் நீக்கிட , அரவணைத்து அமைதி தந்திட , நம் கனவுகளை இணைந்து நனவாக்கிட , மெல்லிய சுரத்தினில் காதல் மொழி பேசிட , திகட்டாமல் தீராமல் காதல் செய்திட, உன் உயர்வு கண்டு நான் பூரித்து மகிழ்ந்திட, என்னை அழகாய் கொண்டு ரசித்து சிலாகித்திட, பரிசு பரிமாற்றங்கள் நடத்தி இரசித்திட, பேரன்போடு பெரு வாழ்வு வாழ்ந்திட , பிரிவுகள் வாட்டி வதைத்திட, கண் பார்வையிலே தீராக் கதைகள் பேசிட, கள்ளப் பார்வைகளில் உறைந்து மீண்டிட, இயற்கையை ரசித்து மெய் மறந்திட, புத்தகங்களில் புதைந்து தொலைந்திட, பேரின்ப மழையினில் மழலையாய் ஆட்டம் போட்டு திளைத்திட, சில நிமிடம் நீடிக்கா செல்லச் சண்டைகள் போட்டிட, சுதந்திரம், சுய மரியாதையோடு முழு வாழுவு வாழ்ந்திட , கால் கொலுசின் இசை கோர்வைகளில் கரைந்திட , உன் பாதம் பிடித்து பரிகாரம் செய்திட, வெட்கம் கூடிய நின் பேரழகு முகத்தினை ஆராதித்திட ,. ...