சமூக நீதி என்னை பொறுத்தவரையில் நீட் போன்ற தகுதி தேர்வுகள் அவசியமே . அனால் அதற்கு முன் அம்பானியின் குழந்தைக்கும் என் கிராமத்து குழந்தைக்கும் ஒரே கல்வி தரத்தை சாத்தியப்படுத்த வேண்டும் . அரசு பள்ளி ஆசிரியர்கள் பெரும்பாலானோர் பள்ளி வருவதே அபூர்வம் . மேலும் அவர்கள் ஆசிரிய பணியோடு பல பணிகளை செய்கிறார்கள் , அதிக சிரத்தையோடு . மேல்நிலை வகுப்புகளில் ஆசிரியர்கள் பாடம் எடுப்பதும் மிகவும் குறைந்து விட்டது . ஆகையால் இத்தகைய ஆசிரியர்களை முதலில் களை எடுக்க வேண்டும் . மிக அர்ப்பணிப்போடு பாடம் நடத்தும் ஆசிரியர்களை மேற்ச்சொன்ன கனவான்கள் ஏளனமாக பார்க்கும் வினோதம் நடந்து கொண்டிருக்கிறது . இதனாலே அரசு பள்ளி ஆசிரியரின் குழந்தைகள் நிச்சயம் அரசு பள்ளியில் கட்டாயம் பயில வேண்டும் என சட்டம் போட வேண்டும் . அப்போது தான் மாணவர்களை தங்கள் சொந்த குழந்தைகளை போல் அன்பு செலுத்துவார்கள் . இவ்வாறு அந்த ஆசிரியர் மட்டும் அன்பு செய்திருந்தால் , பாளையங்கோட்டையில் என் சகோதரி உயிர் நீத்திருக்க மாட்டாள் ...