Skip to main content

மனிதமே மகத்தானது

மனிதமே மகத்தானது என்பது எனக்கு இலக்கியம் கற்றுத்தந்தது .   எதிர்பார்ப்பற்ற அன்பு செய்யும் மனிதர்களை காண நேரும் போதெல்லாம் மனம் பெரும் புத்துணர்ச்சி பெருகின்றது . முக்கூடல் பரணியில் குளித்துவிட்டு சூடாக டீ அருந்துவது வழக்கம் , இம்முறையும் அவ்வாறு சென்ற போது அவரை சந்தித்தேன் .

பார்த்த உடன் நான் அடையாளம் கண்டுகொண்டேன்,  என் பள்ளி பருவங்களின் கோடை காலங்கள் எல்லாம் அவரின் பால் மற்றும் சேமியா ஐஸ்களுடனே கழிந்தன. இப்போது அவர் டீ மாஸ்டர் , முதுமை தந்த வேலை அது என நினைத்துக்கொண்டேன். என்னை பார்த்த உடன் வாஞ்சையுடன் என் கரம் பற்றிக்கொண்டார் என்னை நியாபகம் இருக்கான்னு கேட்டேன் என்னய்யா இப்புடி கேட்டுட்டன்னு என்றவர் கண்கள் ஈரமாகியிருந்தது.

எனக்கும் பின் பேச்சு வரவில்லை. என் மீது அவர் கொண்ட தூய அன்பில் நான் திக்குமுக்காடிப்போனேன். அனால் அவ்வன்பை உணர்ந்ததால் என் மனம் பெறும் உவகை கொண்டது. அவரைப் போன்ற மனிதர்களாலே உலகம் மேலும் அழகாகிறது.


அனைவரும் அன்பு செய்வோம், அழகாகட்டும் அகிலம் ❤️❤️❤️

Comments

Popular posts from this blog

என் தாய் மரணிக்கின்றாள்

ஆம் என் தாய் மரணிக்கின்றாள்... தாமிரபரணித்தாய் மரணிக்கின்றாள்... அது ஒரு மங்கிய மாலைப்பொழுது அன்னையே நான் உன் மடியில் அமர்ந்திருந்தேன்... தென்றல் தீண்டையில் உன் தேகம் சிலிர்த்ததை நான் மட்டுமே கண்டேன்... பறவைகள் உனை பருகிய வேளையில் நானும் உனை பருகி பரவசம் அடைந்தேன்... உன் உள்ளக்களிப்பை நான் உணர்ந்திருந்தேன்... மார்முட்டும் பிள்ளையின் அன்னையாய் நீ பூரித்திருந்தாய்... அந்த சலனமற்ற பயணத்தில் உன் மெல்லிய குரல் என்னை கரையச் செய்தது... கதிரவனின் செந்நிறக் கிரணங்களில் உன் மேனி பொலிவுற்றிருந்தது... பொதிகையில் பிறந்தவளே என் அன்னையே... உன் பாதம் பட்ட இடமெல்லாம் பசுமை பரப்பினவளே ... உழவுக்கு உயிரளித்து எங்களுக்கு அன்னமிட்டவளே... வானம் வஞ்சித்த போதிலும் எங்களுக்கு வாழ்வளித்தவளே... இன்று நீ மரணித்துக்கொண்டிருக்கிறாய்... அநேக அன்னைகளாய் உன் மக்களே உனக்கு மரணம் தந்துவிட்டனர்... பேராசை பித்து பிடித்த கயவர்கள் உன் மேனியைச் சுரண்டி மாளிகை கட்டிக்கொண்டார்கள்.... தாயை கொன்று தன்னை வளர்த்துக்கொண்டார்கள்... மார்பில் துளையிட்டு உனை உறிஞ்சிவிட்டார்கள் பன்னாட்டு பணவெறியர்கள்... உன் பாதையெங்...

குமாயுன் புலிகள் - வாசிப்பு அனுபவம்

குமாயுன் புலிகள் - ஜிம் கார்பெட் தமிழில் தி. ஜ.ர. ஜிம் கார்பெட் ஓர் ஆங்கிலேய வேட்டைக்காரர் மற்றும் வன உயிர் ஆர்வலர். கம்பெனி ஆட்சிக் காலத்தில் இன்றைய உத்ரகாண்ட் மாநிலத்தில் உள்ள குமாயுன் பிரதேசத்தில் தங்கி அங்குள்ள ஆட்கொல்லி புலிகளை வேட்டையாடியவர். இவ்வாறான வேட்டை அனுபவ கட்டுரைகளின் தொகுப்பு இப்புத்தகம். கிண்டிலில் தினமும் கிடைக்கும் இலவச புத்தகங்களில் ஒன்றாய் இது எனக்கு கிடைத்தது. ஆசிரியர் உரையின் வழியே வேங்கைகள் ஆட்கொல்லிகளாக மாறுவதன் காரணத்தை தெளிவாக விளக்கியுள்ளார் ஜிம். மேலும் வேங்கைகள் மீதான மோசமான பொது கருத்துக் களை உடைக்கவும் செய்துள்ளார். மக்களை காக்க ஆட்கொல்லி புலிகளை வேட்டையாடிய போதும் அவற்றின் மீது ஜிம் வைத்திருந்த நேசத்தை உணர முடிந்தது. ஆறு ஆட்கொல்லி புலிகள், ஒரு சிறுத்தை மற்றும் ஒரு மயில் கெண்டை மீன் ஆகியவற்றின் வேட்டை  அனுபவங்களை இப்புத்தகம் கொண்டுள்ளது. ஜிம் ஒரு இடத்தில் கூட தன்னை மிகைப்படுத்தாமல் வேட்டையின் போது அஞ்சி நடுங்கிய தருணங்களை வெளிப்படையாக பதிவு செய்துள்ளார். அவரின் இந்த நேர்மை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும் தேச வேறுபாடின்றி மக்களை அவர் நேசித்ததை ...

மீட்பை நோக்கி - பயண அனுபவம்

எல்லோர் வாழ்விலும் மறக்க விரும்பா நாள் ஒன்று இருக்கும், என் வாழ்வில் அப்படியான ஒரு நாள் தான் அது. அது ஒரு வெள்ளிக்கிழமை அன்று மதியத்துக்கு மேலாகவே அலுவலகத்தில் இருப்பு கொள்ளவில்லை. காரணம் இல்லாத அதீத மன அழுத்தம், எதையாவது உடைக்க வேண்டும் போன்ற மனவோட்டம் இரண்டும் உருவாகியிருந்தது. நேரம் செல்ல செல்ல அந்த அழுத்தம் கூடிக்கொண்டே போனது. எதற்கும் அந்த அழுத்தம் கட்டுப்படவே இல்லை புத்தகம், நண்பர்கள் எதற்கும். மெல்ல அந்த அழுத்தம் தற்கொலை எண்ணமாக மாறுவதை உணரவே மனதில் பயம் வர ஆரம்பித்தது. திடீரென தனியாக எங்காவது பயணம் செல்வோம் அது உதவும் என தோன்றியது. நீண்ட நாள் ஆசையான தஞ்சாவூர் போகலாம் என முடிவு செய்து கிளம்பினேன்.  இப்பயணத்தில் கைபேசி இல்லாமல் மனிதர்கள் உதவி கொண்டே எல்லா விஷயத்தையும் செய்யணும்னு முடிவு பண்ணிக்கிட்டேன். முன்பதிவுகள் புகைப்படம் கூடாதெனவும் முடிவு.  சென்னை கோயம்பேட்டில் இருந்து ஒரு அரசு விரைவு பேருந்தில் ஏறிக்கொண்டேன். பின் பகுதியில் தான் இடம் இருந்தது மெல்ல உள்ளே சென்றேன் ஜன்னல் ஒர இருக்கையில் ஒரு பையன் அமர்ந்திருந்தான். அவனது வசீகரிக்கிற, சுறுசுறுப்பான முகம் மன...