நிசப்த அலைவரிசையில் நின் மொழி கேட்டு காதல் கொண்டேனடி உன்பால்..
அகண்ட உன் பரப்பில் விழுந்து தொலையவே ஆவலடி கண்ணே..
உன் அக்கரை அழகின் அரூபம் காணவே ஆவலடி கண்ணே..
இரவில் உன் பேரழகை காணவே விண்மீன்கள் பிறந்தனவோடி பெண்ணே..
தண்ணொளியால் சிவக்கும் உன் பொன்னிற மேனி காணவே கதிரவனும் வருகிறானோடி கண்ணே..
உன் காதல் கலந்த மெல்லிய மூச்சுக் காற்றில் கரையவே ஆவலடி கண்ணே..
இப்பெரு வாழ்வு பிரிந்து உன்னில் கலந்திடவே ஆவலடி கண்ணே..
ஓய்ந்திடாமல் எனை தொட துடிக்கும் உன் அலைக்கரங்களை அள்ளி அணைத்திடவே ஆவலடி கண்ணே..
இயலா பேராவல்களால் மனம் பெரும் துன்புற, என்றென்றும் மரிக்காதடி ஆழிப்பெண்ணே என் பெருங்காதல்....

Ultimate Anna..
ReplyDeleteமெய்மறந்து தொலைந்து விட்டேன் உங்கள் கவிதை வரிகளில்.....
ReplyDelete