பிரபஞ்சத்தின் பேரழகியும் தோற்று போவாள்....
மல்லிகை சூடி,திலகமிட்டு தாவணி கட்டிய என் தன்மான தமிழ்ப்பெண்ணிடம்....
நேற்றிரவு கனவில்,
நாம் நிலவொளியில் நின்றிருந்தோம்.... குழம்பிப்போயிருந்தேன் நான் எது நிலவென்று. #பளிங்கு முகம் 😍😍😍
பிறவியிலே அழகி அவள். அவளுக்கு மட்டும் அம்மா அன்னத்துடன் அழகையும் ஊட்டினாள் போலும் என் பிரபஞ்சம் யாவும் நிறைந்துவிட்டாள்
தென்றல் தேகம் வருட நிலவொளியில் நாம் நின்றோம் குழம்பி போயிருந்தேன் எது நிலவென்று
கள்வர் கூட்டத்தின் கண்களே களவு செய்கின்றன
தென்றல் தேகம் வருட தரணியின் கரையில் நின் கரம் கோர்த்து நிந்தன் கதைகள் கேட்டு கரையுமா மங்கும் மாலை யாவும்
கரைந்து போகும் காட்சிகளில் , கரைய விரும்பா காட்சி ஒன்று. பௌர்ணமி நிலவொளியில் , காதல் களஞ்சியத்தின் முன் , யமுனையில் பிறந்த ஈரக்காற்றில் கரைந்து கொண்டிருக்கும் நான் # தாஜ்
மலைக்கோவில் வாசல்,
யாவற்றையும் இருக அனைத்திருக்கும் இருள்,
படர்ந்திருக்கும் மார்கழிப் பனி,
இருள் கிழிக்கும் அகல்,
தேகம் தீண்டும் தென்றல்,
காற்றும் கானகமும் காதலிக்கும் இசை,
சிலிர்ப்பு,
பேரன்புத் தையல்,
பெருங்கனவு 😍😍
ஊர் கண் படுமென கடவுள் வைத்த கண்மையோ உன் கன்னத்தின் மச்சம்
உன் அருகிலே நானிருந்தால் உள்ளம் குழதையிடம் அகப்பட்ட காகிதமாய் கசங்கிப் போகிறதடி
மலை முகட்டின் வடிவொத்த நின் புருவங்கள் வருடும் வரம் வருமா வாழ்வில்
அகல் வெளிச்சத்தில் நின் கரிய கண்களுக்கு
கோடி மின்னலின் சக்தி வந்ததெப்படி கண்மணி
இருளுக்கு முந்திய மயங்கும் மாலையின் வானை அவன் கண்கள் ருசித்துக்கொண்டிருந்தன. இரு மலைகளை பிரித்து சென்ற அந்த ரயிலின் உட்புகுந்த தென்றல் , களவாடி வந்த வாசம் அவனுக்கு ஓர் இருப்பை உணர்த்திச் சென்றது.
ஈவு இறக்கமற்றவள் நான் யாசிக்கும் பார்வையை கூட ரட்சிக்க மறுக்கிறாள்
தேர்ந்த ஓவியன் வரைய தொடங்கிய ஒவியத்தின் கரிய கோடுகள் அவள் கன்னம் சரியும் கற்றை கூந்தல் .
Comments
Post a Comment