Skip to main content

Posts

Showing posts from 2021

குமாயுன் புலிகள் - வாசிப்பு அனுபவம்

குமாயுன் புலிகள் - ஜிம் கார்பெட் தமிழில் தி. ஜ.ர. ஜிம் கார்பெட் ஓர் ஆங்கிலேய வேட்டைக்காரர் மற்றும் வன உயிர் ஆர்வலர். கம்பெனி ஆட்சிக் காலத்தில் இன்றைய உத்ரகாண்ட் மாநிலத்தில் உள்ள குமாயுன் பிரதேசத்தில் தங்கி அங்குள்ள ஆட்கொல்லி புலிகளை வேட்டையாடியவர். இவ்வாறான வேட்டை அனுபவ கட்டுரைகளின் தொகுப்பு இப்புத்தகம். கிண்டிலில் தினமும் கிடைக்கும் இலவச புத்தகங்களில் ஒன்றாய் இது எனக்கு கிடைத்தது. ஆசிரியர் உரையின் வழியே வேங்கைகள் ஆட்கொல்லிகளாக மாறுவதன் காரணத்தை தெளிவாக விளக்கியுள்ளார் ஜிம். மேலும் வேங்கைகள் மீதான மோசமான பொது கருத்துக் களை உடைக்கவும் செய்துள்ளார். மக்களை காக்க ஆட்கொல்லி புலிகளை வேட்டையாடிய போதும் அவற்றின் மீது ஜிம் வைத்திருந்த நேசத்தை உணர முடிந்தது. ஆறு ஆட்கொல்லி புலிகள், ஒரு சிறுத்தை மற்றும் ஒரு மயில் கெண்டை மீன் ஆகியவற்றின் வேட்டை  அனுபவங்களை இப்புத்தகம் கொண்டுள்ளது. ஜிம் ஒரு இடத்தில் கூட தன்னை மிகைப்படுத்தாமல் வேட்டையின் போது அஞ்சி நடுங்கிய தருணங்களை வெளிப்படையாக பதிவு செய்துள்ளார். அவரின் இந்த நேர்மை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும் தேச வேறுபாடின்றி மக்களை அவர் நேசித்ததை ...

பல ரூபங்களில் காந்தி - அனு பந்தோபாத்யாயா.

  எஸ்.ராமகிருஷ்ணனின் ரயில் நிலையங்களின் தோழமை பயணக் கட்டுரைத் தொகுப்பில் காந்தி நினைவிடம் சென்றது பற்றிய கட்டுரை வாசித்ததும் காந்தி பற்றி அறிய வேண்டும் என்ற வேட்கை தொற்றிக் கொண்டது. அவ்வாறே பல ரூபங்களில் காந்தி புத்தகத்தை வாசிக்க தொடங்கினேன். காந்தியை மேலோட்டமாக ஆனால் பல கோணங்களில் அறிந்து கொள்ள இப்புத்தகம் உதவியது. வாசித்து முடித்ததும் காந்தியை பற்றிய மதிப்பு பெரிதும் கூடியது. கொள்கை, தத்துவம் மற்றும் நம்பிக்கை ரீதியாக காந்தியுடன் பல முரண்கள் இருந்தாலும் அவர் ஆன்மா, கருணை மற்றும் பண்புகள் என்னை பிரமிக்க வைத்தன. காந்தியின் இருபத்து ஏழு ரூபங்கள் பற்றிய கட்டுரைகள் அடங்கிய தொகுதி இப்புத்தகம். காந்தி பற்றி பொதுச் சமூகம் அறிந்திராத பல ஆச்சர்யமான, வியக்கத்தக்க மற்றும் ஆழமான தாக்கம் ஏற்படுத்தும் தகவல்கள் உள்ளன. காந்தி தான் செய்த எல்லா பணிகளையும் நேசத்துடன், அர்ப்பணிப்புடன், ஆழமாக செய்திருக்கிறார். ஏனோ தானோ என எந்த பணியையும் அவர் செய்யவில்லை. காந்தி கருணை பொங்கும் உள்ளம் கொண்டவர். அன்னை தெரசா போலவே எனக்கு தோன்றினார். எளிய மக்கள் மேல் அளவு கடந்த நேசம் கொண்டிருந்தார். நாட்டு மக்களின் துன்பம்...