தமிழறிஞர் கலைஞர் வாழ்க !!!! தலைப்பு, கலைஞர் இரண்டும் எனக்கு விருப்பமற்றவை தான் , ஆயினும் இந்த பதிவு நான் மிக நேசிக்கும் ஒன்று . இன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு சென்றிருந்தேன். சென்னை வந்து ஒரு வருடமாய் இங்கு வரத்தவறியது குறித்து மனதில் ஒரு உறுத்தல் இருந்ததது. நூலக வாயில் நுழைந்ததும் கட்டிடத்தின் பிரம்மாண்டம் கண்டு பிரமித்து நின்று விட்டேன். அப்போது ஓர் கல்வெட்டு கண்ணில் பட்டது , அதில் கலைஞர் பெயர் பொறிக்கப்பட்டதை கண்டதும் தான் இந்த பிரம்மாண்டம் கலைஞரின் படைப்பு என்பது நினைவுக்கு வந்தது. கலைஞரின் வாரிசு அரசியல் , அவரின் ஆட்சியில் நடந்த சுரண்டல், ஊழல் என பலவற்றால் அவரையும் ,கழகத்தையும் எனக்கு அறவே பிடிப்பதில்லை. ஆயினும் அனைத்தையும் தாண்டி அண்ணா நூலகத்தினால் என் மனதில் அவர் இன்று உயர்ந்து விட்டார் . ஏனெனில் புத்தக வாசிப்பு மிகக்குறைந்த அளவில் உள்ள ஒரு தொண்மைச் சமூகம் நமது தமிழ்ச் சமூகம். நமது நிலையை நன்கு உணர்ந்து புத்தக வாசிப்பை பெருக்க, கலைஞரின் இந்த நூலகம் ஓர் ஆகச்சிறந்த முயற்சி ஆகும். மேலும் புத்தகக் காதலர்கள் , ஆராய்ச்சியா...