Skip to main content

Posts

Showing posts from 2019

மாலை நடையின் அழகியல்கள்

இப்போது தினமும் நடை பயிற்சி செல்கிறேன் இன்று சென்னையில் உள்ள புனித தோமையர் குன்றிற்க்கு சென்றேன் இன்றைய நடை ஓர் வாழ்வனுபவமாக மாறிப்போனதின் விளைவு இந்தப் பதிவு கதிரவனும் வானும் நிகழ்த்தும் வர்ண  ஜாலம். வானெங்கும் பூத்துக்கிடக்கும் விண்மீன்கள். நிலமெங்கும் பூத்துக்கிடக்கும் மின்மீன்கள். தூரத்தில் நிகழும் வானவேடிக்கை. ஓர் மலை கிராமம் போல  ஆனந்த உணர்வு. தேகம் தீண்டும் தென்றல். நெடுந்தூரத்து குன்றுகள். எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இயற்கையே 

தூயவளே

இயற்கை அன்னையின் மெய் நிகரானவளே... பல சென்மங்களின் பூர்வ பலனாய் என் வாழ்வில் வந்தவளே.. பெரும் காட்டுச்சுனை நீர் போலே.. சற்று முன் விரிந்த மொட்டைப் போலே.. என் தாய்த்தமிழ் போலே.. ஆருயிர் நண்பனின் அன்பைப் போலே.. கொட்டும் மலை அருவியின் நீர் போலே.. ஈன்றெடுத்த அன்னையின் பேரன்பு போலே.. உயிர் உருக்கும் குளிர்த் தென்றல் போலே.. ஆர்ப்பரிக்கும் ஆழி போலே.. மயக்கும் மாலை வெயில் போலே.. மழை தரும் கார் முகில் போலே.. உணவளிக்கும் அன்னை மண் போலே.. புல்லின் நுனியில் அமரும் காலைப் பனி போலே.. தாயின் மார்பில் சுரந்த பால் போலே.. உழைப்பில் பிறந்த வியர்வை போலே.. முதுமை பரிசளித்த சுருக்கங்கள் போலே.. மழலையின் பேரன்புப் புன்னகை போலே.. அதி தூய்மையின் மருவடிவானவளே... தூய்மையின் பல நாமங்களில் பிரீத்தி எனப் பெற்றவளே.. என் தங்கையானவளே.. நின் மனம் போலே பெரு வாழ்வு வாழ்வாய் தூயவளே...

ஆழிப்பெருங்காதல்

நிசப்த அலைவரிசையில் நின் மொழி கேட்டு காதல் கொண்டேனடி உன்பால்.. அகண்ட உன் பரப்பில் விழுந்து தொலையவே ஆவலடி கண்ணே.. உன் அக்கரை அழகின் அரூபம் காணவே ஆவலடி கண்ணே.. இரவில் உன் பேரழகை காணவே விண்மீன்கள் பிறந்தனவோடி பெண்ணே.. தண்ணொளியால் சிவக்கும் உன் பொன்னிற மேனி காணவே கதிரவனும் வருகிறானோடி கண்ணே.. உன் காதல் கலந்த மெல்லிய மூச்சுக் காற்றில் கரையவே ஆவலடி கண்ணே.. இப்பெரு வாழ்வு பிரிந்து உன்னில் கலந்திடவே ஆவலடி கண்ணே.. ஓய்ந்திடாமல் எனை தொட துடிக்கும் உன் அலைக்கரங்களை அள்ளி அணைத்திடவே ஆவலடி கண்ணே.. இயலா பேராவல்களால் மனம் பெரும் துன்புற, என்றென்றும் மரிக்காதடி ஆழிப்பெண்ணே என் பெருங்காதல்....

மாதவிடாய் மடமை

நான் : அவள் ஏன் அலுவலகம் வரவில்லை தங்கை கோகிலா : அவளுக்கு வயிற்று வலி நான் : சூட்டாலா வலி தங்கை கோகிலா : இல்லை என ஒரு சிறு மவுனம் காரணம் புரிந்து விட்டது , அந்த தங்கைக்கு மாதவிடாய். மடமையின் சூட்டில் வெந்து துடிக்கிறேன். என் தங்கையும் நானும் மாதவிடாய் குறித்து உரையாடும் நாளை சாத்தியமாக்க நாம் உடனடியாக முயல வேண்டும்.