Skip to main content

Posts

Showing posts from November, 2016

கல்லூரிக்காலம்

உள்ளத்தில் கல்லூரி காலத்தின் நினைவுகள் ஆழிப் பேரலையாய் வெகுண்டு எழுந்து என்னை எழுத தூண்டின . அப்பேரலையின் விடா முயற்ச்சியின் வெற்றிதான் இந்த பதிவு . கவலை ,  போட்டி, பொறாமை ,  வஞ்சம்,  சூழ்ச்சி என தீமை யாவுமின்றி வாழ்வின் பரிசுத்தமான நாட்களாய் நகர்ந்தவை அவை .  வாழ்வின் அடுத்தகட்ட நகர்வுக்கான நிர்பந்தத்தின் விளைவான இந்த நெருக்கடி நாட்களில் சற்று பின்னோக்கி பார்த்ததும் மனம் கட்டி எழுப்பும் கல்லூரியின் நினைவுகளை வார்த்தைகளில் வார்த்து எடுப்பது தனி அலாதிதான் .  கல்லூரி முடித்த யாவரும் திரும்பி பாருங்கள்  கல்லூரியின் நினைவுகள் ஏதும் திரும்பவில்லையெனில் நீங்கள் வாழ்வின் மதிப்பில்லா நாட்களை சரியாய் வாழ தவறிவிட்டீர்கள் . மிகப்பாவம் நீங்கள் .  சற்று உற்று நோக்கினால் அவை கவலை இல்லா நாட்கள் இல்லை ஆனால் கவலைகளை மறக்க வைத்த நாட்கள் மறக்க வைத்தது அந்த இடம்   காரணங்கள் பற்பல... கல்லூரியின் ஒரு நாள்  எந்த அவசரமும் இன்றி மிக நிதானமாக அமைதியாக தொடங்கும்....