Skip to main content

Posts

Showing posts from October, 2016
பாதுகாக்க பண்பாடு  சங்கம் வைத்து தமிழ் வளர்த்து..  யானை கட்டி போர் அடித்து .. ஆழிப் பேரலையில் அணை கட்டி.. இமயம் வென்று கொடிநாட்டி.. தறி கொண்டு துணி நெய்து.. வானியலை வரையறுத்து.. பொறியியல் புகுத்தி கோபுரம் கட்டி ... முறம் கொண்டு புலி விரட்டி.. எண்ணிலடங்கா இலக்கியம் செய்து.. உழுதுண்டு உள மகிழ்ந்து.... கவிதையில் அடங்கா காரியங்கள் பல செய்து.... போற்றி காப்பாற்றிய நம் பண்பாட்டை-வேற்று தேசத்தவனின்... வியாபார புத்தியில் நாசம்  செய்தோம்.... அவன் நாட்டு அடிமட்ட உணவையும் அழ‌காய் விற்றான் ... அந்தஸ்து என நாமும் உண்டோம்... பாரம்பரிய உணவுகளை பரிகாசம் செய்தோம்... வெப்ப தேசத்து உடை மறந்து வெள்ளைக்காரன் உடையணிந்தோம்... நாகரீக மோகத்தில் அறிவிழந்தோம்.. வரலாற்றை அழித்தான் அனாதைகளானோம்... மரணத் தருவாயில் இன்று மானத் தமிழன் பண்பாடு..... இப்போது, ஆர்ப்பரிக்கிறோம்  அங்கலாய்க்கிறோம்.. போராடுகிறோம்  புரண்டெழுகிறோம்..  பாதுகாக்க நம் பண்பாட்டை நம் நாட்டில் ...
ஹைக்கூ வர்ண ஜாலங்களின் மேடை வானம் ... ஜாலக்காரன் சூரியன் ... ஆடியன்ஸ்க்கு தான் ஆளில்லை !!!!
கோட்டிக்காரன் மழைக்கு முந்தைய வாடைக்காற்று.... கரிய மேகக் கூட்டம்.... பக்கத்து ஊரின் மண் வாசம்... தூரத்து மரக்கிளை பறவையின் கானம்.... வேறென்ன வேணும் மனசு மகிழ.. காகிதத்துடன் கல்லிடம் மன்றாடுகிறான் கோட்டிக்காரன்.
முதல் பதிவு அம்மாவுக்காக. ஹைக்கூ என்னை சுவாசிக்க வைத்தவளுக்கு நான் வாசித்த முதல் கவிதை அம்மா.