Skip to main content

Posts

மாலை நடையின் அழகியல்கள்

இப்போது தினமும் நடை பயிற்சி செல்கிறேன் இன்று சென்னையில் உள்ள புனித தோமையர் குன்றிற்க்கு சென்றேன் இன்றைய நடை ஓர் வாழ்வனுபவமாக மாறிப்போனதின் விளைவு இந்தப் பதிவு கதிரவனும் வானும் நிகழ்த்தும் வர்ண  ஜாலம். வானெங்கும் பூத்துக்கிடக்கும் விண்மீன்கள். நிலமெங்கும் பூத்துக்கிடக்கும் மின்மீன்கள். தூரத்தில் நிகழும் வானவேடிக்கை. ஓர் மலை கிராமம் போல  ஆனந்த உணர்வு. தேகம் தீண்டும் தென்றல். நெடுந்தூரத்து குன்றுகள். எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இயற்கையே 

தூயவளே

இயற்கை அன்னையின் மெய் நிகரானவளே... பல சென்மங்களின் பூர்வ பலனாய் என் வாழ்வில் வந்தவளே.. பெரும் காட்டுச்சுனை நீர் போலே.. சற்று முன் விரிந்த மொட்டைப் போலே.. என் தாய்த்தமிழ் போலே.. ஆருயிர் நண்பனின் அன்பைப் போலே.. கொட்டும் மலை அருவியின் நீர் போலே.. ஈன்றெடுத்த அன்னையின் பேரன்பு போலே.. உயிர் உருக்கும் குளிர்த் தென்றல் போலே.. ஆர்ப்பரிக்கும் ஆழி போலே.. மயக்கும் மாலை வெயில் போலே.. மழை தரும் கார் முகில் போலே.. உணவளிக்கும் அன்னை மண் போலே.. புல்லின் நுனியில் அமரும் காலைப் பனி போலே.. தாயின் மார்பில் சுரந்த பால் போலே.. உழைப்பில் பிறந்த வியர்வை போலே.. முதுமை பரிசளித்த சுருக்கங்கள் போலே.. மழலையின் பேரன்புப் புன்னகை போலே.. அதி தூய்மையின் மருவடிவானவளே... தூய்மையின் பல நாமங்களில் பிரீத்தி எனப் பெற்றவளே.. என் தங்கையானவளே.. நின் மனம் போலே பெரு வாழ்வு வாழ்வாய் தூயவளே...

ஆழிப்பெருங்காதல்

நிசப்த அலைவரிசையில் நின் மொழி கேட்டு காதல் கொண்டேனடி உன்பால்.. அகண்ட உன் பரப்பில் விழுந்து தொலையவே ஆவலடி கண்ணே.. உன் அக்கரை அழகின் அரூபம் காணவே ஆவலடி கண்ணே.. இரவில் உன் பேரழகை காணவே விண்மீன்கள் பிறந்தனவோடி பெண்ணே.. தண்ணொளியால் சிவக்கும் உன் பொன்னிற மேனி காணவே கதிரவனும் வருகிறானோடி கண்ணே.. உன் காதல் கலந்த மெல்லிய மூச்சுக் காற்றில் கரையவே ஆவலடி கண்ணே.. இப்பெரு வாழ்வு பிரிந்து உன்னில் கலந்திடவே ஆவலடி கண்ணே.. ஓய்ந்திடாமல் எனை தொட துடிக்கும் உன் அலைக்கரங்களை அள்ளி அணைத்திடவே ஆவலடி கண்ணே.. இயலா பேராவல்களால் மனம் பெரும் துன்புற, என்றென்றும் மரிக்காதடி ஆழிப்பெண்ணே என் பெருங்காதல்....

மாதவிடாய் மடமை

நான் : அவள் ஏன் அலுவலகம் வரவில்லை தங்கை கோகிலா : அவளுக்கு வயிற்று வலி நான் : சூட்டாலா வலி தங்கை கோகிலா : இல்லை என ஒரு சிறு மவுனம் காரணம் புரிந்து விட்டது , அந்த தங்கைக்கு மாதவிடாய். மடமையின் சூட்டில் வெந்து துடிக்கிறேன். என் தங்கையும் நானும் மாதவிடாய் குறித்து உரையாடும் நாளை சாத்தியமாக்க நாம் உடனடியாக முயல வேண்டும்.

கவிதையில் அடங்கா வரிகள்

பிரபஞ்சத்தின் பேரழகியும் தோற்று போவாள் ....       மல்லிகை சூடி , திலகமிட்டு தாவணி கட்டிய   என் தன்மான தமிழ்ப்பெண்ணிடம் .... நேற்றிரவு கனவில் ,                    நாம் நிலவொளியில் நின்றிருந்தோம் .... குழம்பிப்போயிருந்தேன் நான் எது நிலவென்று . # பளிங்கு முகம் 😍😍😍 பிறவியிலே அழகி அவள் . அவளுக்கு மட்டும் அம்மா அன்னத்துடன் அழகையும் ஊட்டினாள் போலும் என் பிரபஞ்சம் யாவும் நிறைந்துவிட்டாள்   தென்றல் தேகம் வருட நிலவொளியில் நாம் நின்றோம் குழம்பி போயிருந்தேன் எது நிலவென்று     கள்வர் கூட்டத்தின் கண்களே களவு செய்கின்றன   தென்றல் தேகம் வருட தரணியின் கரையில் நின் கரம் கோர்த்து நிந்தன் கதைகள் கேட்டு கரையுமா மங்கும் மாலை யாவும்   கரைந்து போகும் காட்சிகளில் , கரைய விரும்பா காட்சி ஒன்று . பௌர்ணமி நிலவொளியில் , காதல் களஞ்சியத்தின் முன் , யமுனையில் பிறந்த ஈரக்காற்றில் கரைந்து கொண்டிருக்கும் நான் # தாஜ்   ...

சமூக நீதி

சமூக நீதி  என்னை பொறுத்தவரையில் நீட் போன்ற தகுதி தேர்வுகள் அவசியமே . அனால் அதற்கு முன் அம்பானியின் குழந்தைக்கும் என் கிராமத்து குழந்தைக்கும் ஒரே கல்வி தரத்தை சாத்தியப்படுத்த வேண்டும் .  அரசு பள்ளி ஆசிரியர்கள் பெரும்பாலானோர் பள்ளி வருவதே அபூர்வம் . மேலும் அவர்கள் ஆசிரிய பணியோடு பல பணிகளை செய்கிறார்கள் , அதிக சிரத்தையோடு . மேல்நிலை வகுப்புகளில் ஆசிரியர்கள் பாடம் எடுப்பதும் மிகவும் குறைந்து விட்டது . ஆகையால் இத்தகைய ஆசிரியர்களை முதலில் களை எடுக்க வேண்டும் . மிக அர்ப்பணிப்போடு பாடம் நடத்தும் ஆசிரியர்களை மேற்ச்சொன்ன கனவான்கள் ஏளனமாக பார்க்கும் வினோதம் நடந்து கொண்டிருக்கிறது . இதனாலே அரசு பள்ளி ஆசிரியரின் குழந்தைகள் நிச்சயம் அரசு பள்ளியில் கட்டாயம் பயில வேண்டும் என சட்டம் போட வேண்டும் . அப்போது தான் மாணவர்களை தங்கள் சொந்த குழந்தைகளை போல் அன்பு செலுத்துவார்கள் .  இவ்வாறு அந்த ஆசிரியர் மட்டும் அன்பு செய்திருந்தால் , பாளையங்கோட்டையில் என் சகோதரி உயிர் நீத்திருக்க மாட்டாள் ...
தமிழறிஞர் கலைஞர் வாழ்க !!!! தலைப்பு, கலைஞர் இரண்டும் எனக்கு விருப்பமற்றவை தான் , ஆயினும் இந்த பதிவு நான் மிக நேசிக்கும் ஒன்று . இன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு சென்றிருந்தேன்.  சென்னை வந்து ஒரு வருடமாய் இங்கு வரத்தவறியது குறித்து மனதில் ஒரு உறுத்தல் இருந்ததது. நூலக வாயில் நுழைந்ததும் கட்டிடத்தின் பிரம்மாண்டம் கண்டு பிரமித்து நின்று விட்டேன். அப்போது ஓர் கல்வெட்டு கண்ணில் பட்டது , அதில் கலைஞர் பெயர் பொறிக்கப்பட்டதை கண்டதும் தான் இந்த பிரம்மாண்டம் கலைஞரின் படைப்பு என்பது நினைவுக்கு வந்தது. கலைஞரின் வாரிசு அரசியல் , அவரின் ஆட்சியில் நடந்த சுரண்டல், ஊழல் என பலவற்றால் அவரையும் ,கழகத்தையும் எனக்கு அறவே பிடிப்பதில்லை. ஆயினும்  அனைத்தையும் தாண்டி அண்ணா நூலகத்தினால் என் மனதில் அவர் இன்று உயர்ந்து விட்டார் .  ஏனெனில் புத்தக வாசிப்பு மிகக்குறைந்த அளவில் உள்ள ஒரு தொண்மைச் சமூகம் நமது தமிழ்ச் சமூகம். நமது நிலையை நன்கு உணர்ந்து புத்தக வாசிப்பை பெருக்க, கலைஞரின் இந்த நூலகம் ஓர் ஆகச்சிறந்த முயற்சி ஆகும். மேலும் புத்தகக் காதலர்கள் , ஆராய்ச்சியா...